Theme Check

இதை பின்பற்றாவிட்டால் 3வது அலை சாத்தியம்… : சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை..!

இதை பின்பற்றாவிட்டால் 3வது அலை சாத்தியம்… : சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை..!

இதை பின்பற்றாவிட்டால் 3வது அலை சாத்தியம்… : சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை..!
X

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில், முக கவசம் அணிவதற்கு மக்கள் ஏன் தயங்குகிறார்கள், சரிவர ஏன் அணிவதில்லை என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அது குறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் பேட்டி அளித்தார். அப்போது, மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதற்கான பொதுவான 4 காரணங்களை அவர் பட்டியலிட்டார்.


* முக கவசம் அணிவதால் சுவாசிக்க சிரமம் இருப்பதால் அணிவதில்லை.

* முக கவசம் அணிவது வசதி குறைவாகவும், தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் இருப்பதாலும் அணியவில்லை.

* ஒருவருடன் பேசும்போது நீண்ட தொலைவு சமூக விலகல் விட்டு நின்று இருக்கும் போது முக கவசம் தேவையில்லை என்பதால் அணிவதில்லை

* முக கவசம் அணிவதால் மட்டும் கொரோனா பரவுவதைத் தடுக்க முடியாது என்ற நம்பிக்கையில் அணியவில்லை.

முக கவசம் அணிவதால் மட்டும் கொரோனா பரவலைத் தடுக்க முடியாது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது தவறான நம்பிக்கை. கொரோனா பரவலைத் தடுக்கும் முக்கிய கருவி முக கவசம். மக்கள் மத்தியில் இது போல நிறைந்திருக்கும் தவறான புரிதல் காரணமாகவும், கவனக்குறைவும்தான் மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும்,

கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றாவிட்டால், கொரோனா மூன்றாவது அலை சாத்தியம். ஆனால், நாங்கள் கொரோனா மூன்றாவது அலை குறித்துப் பேசினாலே, நாங்கள் ஏதோ வானிலை அறிக்கை படிப்பதுபோல் மக்கள் நினைக்கிறார்கள்” என, லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it