மூன்றரை வயது குழந்தையை கொடுமைப் படுத்திய சித்தி..! கொலை செய்த தந்தை கைது..!!
மூன்றரை வயது குழந்தையை கொடுமை செய்த சித்தி..! கொலை செய்த தந்தை கைது..! !

ராணிப்பேட்டை அருகே முதல் மனைவியின் மூன்றரை வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் தந்தை, சித்தியை போலீசார் கைது செய்தனர். காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சங்கர் என்பவருக்கும், தஞ்சையை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சவுமியா என்ற மூன்றரை வயது மகள் இருந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவி பிரிந்தனர். மகள் சவுமியா தந்தையுடன் வசித்து வந்த நிலையில், அவர் சந்தியா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
கர்ப்பிணியான சந்தியா, முதல் மனைவியின் மகளான சவுமியாவை கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சவுமியா திடீரென உயிரிழந்த நிலையில், படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக இருவரும் கூறினர். எனினும் சாவில் மர்மம் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதன்படி, சவுமியாவை தாக்கி கொலை செய்ததாக தந்தை சங்கர், மற்றும் சித்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in

