ஜோதிமணி உட்பட 4 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. சபாநாயகர் அறிவிப்பு

ஜோதிமணி உட்பட 4 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. சபாநாயகர் அறிவிப்பு

ஜோதிமணி உட்பட 4 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. சபாநாயகர் அறிவிப்பு
X

மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேரை சஸ்பெண்டு செய்து செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மக்களை பாதிக்கும் திட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ரம்யா ஹரிதாஸ்,, டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 பேரை இடைக்கால நீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தவிடமால் அமளியில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மக்களவை சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

parliment

மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் 4 பேரையும் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் 4 எம்.பிக்களும் பங்கேற்க கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

இதில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it