சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை.. பாசக்கார தம்பி உட்பட 4 பேர் கைது..!
சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை.. பாசக்கார தம்பி உட்பட 4 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த ஜம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (47). இவரது தம்பி சந்திரசேகர் (45). இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலம் மற்றும் சொத்து தகராறு காரணமாக பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், இருவருக்கும் பொதுவான நிலத்தில் உள்ள மரத்தை சக்கரவர்த்தி வெட்டி இருக்கிறார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், உறவினர் ஆட்டுக்காரன், மகன் சஞ்சய், மருமகள் ஜெயந்தி, மனைவி இந்திரா, உறவினர்கள் செல்லம்மாள் மற்றும் ரகுமதி ஆகிய ஏழு பேரும் ஒன்று சேர்ந்து, தடி மற்றும் இரும்புக் கம்பிகளால் சக்கரவர்த்தியின் தலையில் தாக்கியுள்ளனர்.
இதில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சக்கரவர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று சக்கரவர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், சக்கரவர்த்தியை கொலை செய்த வழக்கில் அவரது தம்பி சந்திரசேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்திரசேகர், ஆட்டுக்காரன், ஆட்டுக்காரன் மனைவி செல்லம்மாள் மற்றும் சந்திரசேகர் மகன் சஞ்சய் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள ஜெயந்தி, இந்திரா மற்றும் ரகுமதி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

