Theme Check

சாமி சிலைகள் விற்க முயற்சி… பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!!

சாமி சிலைகள் விற்க முயற்சி… பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!!

சாமி சிலைகள் விற்க முயற்சி… பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!!
X

ராமநாதபுரத்தில் சாமி சிலைகளை கடத்தி விற்க முயன்ற பா.. மாவட்ட நிர்வாகி, 2 காவலர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பா.. சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளரான முதுகுளத்துாரை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் என்பவர், சட்ட விரோதமாக தொன்மையான சாமி சிலைகளை விற்க முயற்சி செய்வதாக, மதுரை சிலை தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவுப்பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அலெக்ஸாண்டரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அலெக்சாண்டரிடம் 7 சிலைகள் இருப்பது தெரியவந்தது.

statue2

அருப்புக்கோட்டை காவல்நிலைய காவலரான இளங்குமரன் மற்றும் விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி ஆகிய இருவரும் தன்னிடம் சிலையை விற்பனை செய்வதற்காக கொடுத்தாக அவர் கூறினார். இதனையடுத்து காவலர் இளங்குமரன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.

4 வருடங்களுக்கு முன்பு காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலரான நாகநரேந்திரன், விருதுநகரை சேர்ந்த கணேசன் மற்றும் கருப்பசாமி ஆகிய 4 பேரும் எடப்பாடி சென்று, தாங்கள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் என்று கூறி மிரட்டி 7 உலோக சிலைகளை எடுத்து வந்தது தெரியவந்தது.

statue2

இதனையடுத்து அலெக்சாண்டர் பதுக்கிவைத்திருந்த 7 சிலைகளை கைப்பற்றிய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், பா..க நிர்வாகி அலெக்சாண்டர், காவலர்களான இளங்குமரன், நாகநரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ், விருதுநகரை சேர்ந்த கணேசன் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

newstm.in

Next Story
Share it