Theme Check

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது..!!

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது..!!

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது..!!
X

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்களை கடந்த மார்ச் 21-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இதில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோரின் காவலையும் வரும் 18-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story
Share it