4 நாள்கள் இரவு பகலாக நடந்த போராட்டம் தோல்வி.. 6 வயது சிறுவனுக்கு நடந்த சோகம் !!

4 நாள்கள் இரவு பகலாக நடந்த போராட்டம் தோல்வி.. 6 வயது சிறுவனுக்கு நடந்த சோகம் !!

4 நாள்கள் இரவு பகலாக நடந்த போராட்டம் தோல்வி.. 6 வயது சிறுவனுக்கு நடந்த சோகம் !!
X

ஆழ்துளை கிணற்றில் இருந்து 4 நாள் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தின் ஷோகாக் கிராமத்தில் சமீபத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று மூடாமல் இருந்து வந்துள்ளது. பெரும் ஆபத்தாக இருந்த அந்த பள்ளத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஆள்துளை கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
afghan
25 மீட்டர் ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 10 மீட்டர் ஆழத்தில் சிறுவன் சிக்கிக்கொண்டான். இதை தொடர்ந்து அக்கிராமத்தினர் கயிறு கட்டி சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால், கிராமத்தினரின் முயற்சிக்கு எவ்வித பலனும் அளிக்கவில்லை. சிறுவனின் நிலைமையை மோசமானது.

அதை தொடர்ந்து ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனாலும் மீட்பு குழுவினரால் சிறுவனை நெருங்க முடியவில்லை. அதே சமயம் சிறுவன் சுயநினைவுடன் இருப்பதை உறுதி செய்ய, அவனது தந்தை சிறுவனிடம் பேச்சு கொடுத்தவாறு இருந்தார். சிறுவனும் தந்தையுடன் பேசி வந்தான். ஆனால் நேற்று முன்தினம் காலை முதல் சிறுவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

afghan

இந்த நிலையில் 4 நாள் போராட்டத்துக்கு பின் நேற்று மதியம் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான். சிறுவனை காபூலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டதும், அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மீட்பு குழுவினரின் 4 நாள் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it