Theme Check

மேயருக்கு 4 கிலோ வெள்ளி செங்கோல்..!

மேயருக்கு 4 கிலோ வெள்ளி செங்கோல்..!

மேயருக்கு 4 கிலோ வெள்ளி செங்கோல்..!
X

திருச்சி நகராட்சி கடந்த 1994-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் கடந்த 1996-ம் ஆண்டு, முதல் மேயராக புனிதவள்ளி பழனியாண்டி பதவியேற்றார். ஆனால், மேயருக்கு செங்கோல் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், சேலம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் எம்எல்ஏ பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், 4 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கோல் ஒன்றை திருச்சி மாநகராட்சி மேயருக்கு நன்கொடையாக வழங்கினார்.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா, கமிஷனர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற, மாவட்ட கலெக்டர் சிவராசு, வெள்ளியிலான செங்கோலை மேயர் அன்பழகனுக்கு வழங்கினார்.

இதையடுத்து, திருச்சி மாநகராட்சி மையக் கட்டடம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டுவது என முதல் மாமன்ற கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டங்கள், 5 மண்டலமாக உயர்த்தப்பட்டுள்ளது. 5வது மண்டலத்திற்கான புதிய கட்டடம், ஜெகதாபுரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ் அமைக்க நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

Next Story
Share it