ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் உயிரிழப்பு!!
ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் உயிரிழப்பு!!

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மும்பையிலிருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான இடத்தில் விபத்து நேரிட்டுள்ளது. ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உள்பட 7 பேர் இருந்த நிலையில் கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் அனைவரும் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 4 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் மேலும், மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

9 பேருடன் பறந்த ஹெலிகாப்டர் 50 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஓ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய் கிணறு அருகிலேயே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in
Next Story

