சாலையில் சண்டை.. மின்னல் வேகத்தில் ஆம்னி பேருந்து மோதியதில் 4 பேர் பலி..!
சாலையில் சண்டை.. மின்னல் வேகத்தில் ஆம்னி பேருந்து மோதியதில் 4 பேர் பலி..!

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த தொழிலதிபர் ஐசக் என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில் தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் அரக்கோணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி-சென்னை சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் இறைஞ்சி என்ற இடத்தில் வந்தபொழுது இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று அதன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி அரசு பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது, திருச்சியில் இருந்து சென்னை சென்ற தனியார் சொகுசு பேருந்து கார் மற்றும் அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தொழிலதிபர் ஐசக், அரசு பேருந்து பயணிகள் இருவர், அடையாளம் தெரியாத ஒருவர் என 4 பேர் பலியானார்கள். தனியார் பேருந்து, அரசு பேருந்துகளில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே இருந்ததால், சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in


