Theme Check

குற்றவாளியை வாகனத்தில் அழைத்துச்சென்ற 4 போலீசார் உயிரிழப்பு !!

குற்றவாளியை வாகனத்தில் அழைத்துச்சென்ற 4 போலீசார் உயிரிழப்பு !!

குற்றவாளியை வாகனத்தில் அழைத்துச்சென்ற 4 போலீசார் உயிரிழப்பு !!
X

வழக்கு ஒன்றுக்காக குற்றவாளியை காரில் அழைத்துச்செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காவல்துறையினர் நான்கு பேரும் உயிரிழந்தனர்.

தலைநகர் டெல்லியில் இருந்து குஜராத்திற்கு ஒரு குற்றவாளியை காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச்சென்றனர். அதாவது, வாகனத்தில் குற்றவாளி மற்றும் நான்கு காவல்துறையினர் இருந்துள்ளனர். டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான நிஜார் மோர் அருகே ஜெய்ப்பூரில் உள்ள பாப்ரு பகுதியில் அவர்களது வாகனம் சென்றப்போது திடீரென விபத்தில் சிக்கியது.

இதில் காவல்துறையினர் சென்ற வாகனத்தின் முன்பகுதி நொறுங்கியது. மேலும் உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

!!

இந்த சாலை விபத்தில், பணியில் இருந்த தலைமைக் காவலர் மன்சுக் பாய் மற்றும் காவலர்கள் இர்பான் பதான், பீகா முகேரா மற்றும் ஷக்ரி சிங் கோல் ஆகியோரும், குற்றவாளியான டெல்லி சீலம்பூரைச் சேர்ந்த சயீன் என்ற முன்னாவும் பலியானார்கள். விபத்தில் பலியானவர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

வழக்கில் ஒன்றின் விரிவான விசாரணைக்கு அழைத்துச்செல்லும் போது விபத்து ஏற்பட்டது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.ஒருவேளை அந்நபரை கொலை செய்யும் நோக்கில் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் நான்கு காவல்துறையினர் உயிரிழந்துள்ளது, சக காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it