எல்லையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!
எல்லையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கந்தர்பால், புல்வாமா, ஹந்த்வாரா ஆகிய மாவட்டங்களில் என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று இரவு ஐந்து இடங்களில் நாங்கள் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் புல்வாமாவில் ஒரு பாகிஸ்தானியர் உட்பட ஜெய்ஷ் இ-முகமது அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கந்தர்பால் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் ஒரு லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

ஹந்த்வாராவில் ஒரு லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி கொல்லப்பட்டனர் டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும், ஹந்த்வாரா மற்றும் புல்வாமாவிலும் தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படையின் என்கவுன்டர்கள் நடத்தப்பட்டது.
அதில் மேலும் ஒரு பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டதாக காஷ்மீர் டிஜிபி தெரிவித்துள்ளார். தொடர்ந்து எல்லையில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
newstm.in

