Theme Check

ரூ.2.75 கோடி மோசடி செய்த 4 பெண்கள் கைது!!

ரூ.2.75 கோடி மோசடி செய்த 4 பெண்கள் கைது!!

ரூ.2.75 கோடி மோசடி செய்த 4 பெண்கள் கைது!!
X

விருதுநகரில் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி 2.75 கோடி ரூபாய் மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஜான் செல்வராஜ், விக்னேஷ் குமார் (31), அவரது மனைவி மணிமேகலை (28,) மணிமேகலையின் சகோதரி சர்மிளா (25) மற்றும் சிவகாசி ரிசர்வ் லயனை சேர்ந்த கோகில வாணி ஆகிய நால்வரும் சேர்ந்து சிவகாசி தென்றல் நகரில் இனிக்கோ வங்கி என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.

அவர்கள் வைப்பு தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி 100 க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால் முதலீடு செய்த பணம் பெரும்பாலானோருக்கு திரும்பி தரப்படவில்லை என கூறப்படுகிறது.

arrest

இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த விஷ்ணுபிரியா என்பவர் விருதுநகர் பொருளாதார குற்ற பிரிவு அலுவலகத்தில் 14 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

அதன் பேரில் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 100க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து இதுபோல் ஏமாந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

newstm.in

Next Story
Share it