கடலில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!
கடலில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்த 4 வயது சிறுமி நினா கோம்ஸ் தன் தந்தையுடன் சேர்ந்து கடற்பகுதியில் கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தி வருகிறார்.
தன் தந்தை எடுத்த கடற்சார் உயிரினங்கள் குறித்த திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட சிறுமி நினா கோம்ஸ் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன் மற்றும் ஆமைகள் உயிரிழப்பதை தவிர்க்க முயன்று வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 1 கோடியே 10 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாகவும், அதனால் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாகவும் ஐ.நா.வுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
Tags:
Next Story

