Theme Check

அக்கம் பக்கத்தினர்க்கு ஷாக் கொடுத்த 4 வயது சிறுமி..!!

அக்கம் பக்கத்தினர்க்கு ஷாக் கொடுத்த 4 வயது சிறுமி..!!

அக்கம் பக்கத்தினர்க்கு ஷாக் கொடுத்த 4 வயது சிறுமி..!!
X

பொதுவாக பாம்பு மனிதரை நெருங்க விரும்புவதில்லை. மனிதர்கள் இருப்பதை உணர்ந்தால் அவை விலகிச் செல்லவே நினைக்கின்றன. ஆனால், பாம்புகளிடம் பொதுமக்களுக்கு அச்சம் உள்ளது. அதற்கு காரணம் பாம்புகளிடம் இருக்கும் கொடிய விஷம்தான். இந்த நிலையில், 4 வயது சிறுமி தன்னுடைய வீட்டு அருகே வந்த பாம்பை தனது கைகளால் பிடித்து விளையாடி அக்கம் பக்கத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளாள்.

snake

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை ஆலோரை பகுதியில் வசிப்பவர் மகேந்திரன். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 4 வயதில் ஸ்ரீ நிஷா என்ற மகளும் உள்ளனர். இவரது மகள் நேற்று முன்தினம் வீட்டின முன் விளையாடி கொண்டிருந்தபோது வீட்டு வாசலில் 4 அடி நீள பாம்பு ஒன்று நுழைந்தது. வீட்டில் இருந்தவர்கள் அச்சப்பட்டனர்.

ஆனால் ஸ்ரீநிஷா யாரும் எதிர்பாராத வகையில் அந்த பாம்பை கையால் பிடித்தாள். இதனை கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஸ்ரீநிஷா எவ்விதமான அச்சமுமின்றி நீண்ட நேரம் பாம்பை கையில் வைத்திருந்தாள்.

coonoor

பின்னர் அருகே இருந்த பாம்பு பொந்துக்குள் விடுவித்தார். இதனை அருகே இருந்தவர்கள் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story
Share it