Theme Check

கட்டுமானப் பொருட்களின் விலை 40% உயர்வு!!

கட்டுமானப் பொருட்களின் விலை 40% உயர்வு!!

கட்டுமானப் பொருட்களின் விலை 40% உயர்வு!!
X

நெல்லை மாவட்டத்தில் குவாரிகள் இயங்காததால் கட்டுமான பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் 14ஆம் தேதி அடைப்பான் குளம் பகுதியில் உள்ள குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அனைத்து குவாரிகள் மற்றும் கிரசர்களில் விற்பனை நிறுத்தப்பட்டது . கனிம வள துறையின் உதவி இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேறுவழியின்றி அண்டை மாவட்டகளிலிருந்து கனிமங்களை வாங்கும் சூழ்நிலைக்கு கட்டுமான தொழிலில் இருப்பவர்கள், புதிய வீடுகள் கட்டுபவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

construct

30 சதவீத அளவில் கனிமங்களின் விலை உயர்ந்து இருக்கும் நிலையில் அதனை கொண்டுவர பயன்படுத்தும் லாரிகளின் வாடகையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கேட்ட போது, என்னென்ன விதிமீறல்கள் உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. குவாரிகள், கிரசர்கள் திறப்பது குறித்து கனிமவளத்துறை தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it