Theme Check

தமிழ்நாட்டில் ஒரு ரவுடிக்கு உதவியதாக 40 காவலர்கள் பணியிட மாற்றம்!!

தமிழ்நாட்டில் ஒரு ரவுடிக்கு உதவியதாக 40 காவலர்கள் பணியிட மாற்றம்!!

தமிழ்நாட்டில் ஒரு ரவுடிக்கு உதவியதாக 40 காவலர்கள் பணியிட மாற்றம்!!
X

ரவுடி படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக 40 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன் மீது கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தற்போது தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் அவரது மனைவி எல்லம்மாளை எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர்.

padapai guna

இதற்கிடையே எல்லாம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘தனது கணவரைக் காவல்துறையினர் என்கவுண்டர் செய்யக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டம் இல்லை, அவர் சரணடையும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை உறுதி அளித்தது.

இந்தநிலையில், படப்பை குணாவுக்கு பல வழிகளில் உதவி செய்ததாக 8 காவலர்கள், 10 முதன்மை காவலர்கள், 15 தலைமை காவலர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், 3 காவல் ஆய்வாளர்கள் என 40 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

padapai guna

பணியிடம் செய்யப்பட்ட 40 பேர்களும் சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it