மாணவர்களுக்கு.. 40% விலை உயர்வு..!
மாணவர்களுக்கு.. 40% விலை உயர்வு..!

அச்சக தொழிலின் மிக முக்கிய மூலப்பொருட்களான பேப்பர், பிளேட், இங்க், கெமிக்கல் போன்றவைகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் கடந்த ஜனவரி 1, 2022 முதல் 20% விலை உயர்த்தப்படும் என அறிவித்தது.
இந்நிலையில், மீண்டும் அதே நிறுவனங்கள் ஏப்ரல் 1, 2022 முதல் மேற்கண்ட மூலப்பொருள்களின் விலை 40% உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயண்படுத்தும் நோட்டு, புத்தகங்களின் விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 35 ரூபாயாக இருந்த ஒரு குயர் நோட்டின் விலை 50 ரூபாயாகவும், 55 ரூபாயாக இருந்த கிங் சைஸ் நோட்டின் விலை 65 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
அத்துடன், 100 ஏ 4 தாள்களின் விலை 155 ரூபாயில் இருந்து 210 ரூபாயாக உயர்ந்துள்ளது. இனி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு கூடுதல் செலவுதான்.
Next Story

