40 நாள் குழந்தை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை!!
40 நாள் குழந்தை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியைச் சேர்ந்த மனோ(22) என்பவருக்கும், அம்மூர் பகுதியைச் சேர்ந்த அம்சாநந்தினி (21) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த 4ஆம் தேதி அதிகாலையில் அம்சா தூங்கி எழுந்த போது அருகில் குழந்தையை காணவில்லை. கணவரும், குடும்பத்தினரும் தேடிப்பார்த்த போது கழிவறையில் இருந்த வாளி தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை இறந்து கிடந்தது.
போலீஸார் நடத்திய விசாரணையில், மனோவின் அப்பா ராமு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு சொந்தமான வீடு தோல்ஷாப் பகுதியில் உள்ளது. ராமு இறந்த பிறகு வீடு தனக்கு கிடைத்து விடும் என்று ராமுவின் சகோதரி தேன்மொழி இருந்துள்ளார்.

ராமு இறந்தாலும், அவரது மனைவி இளமதி, வீட்டு வேலை செய்து மனோவை வளர்த்துள்ளார். வளர்ந்த பின் மனோவும் பூக்கட்டும் வேலைக்கு சென்றதால் அந்த வருவாயில் குடிசை வீட்டை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். மனோ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தேன்மொழி வெறுப்புடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் தேன்மொழியும், அவரது மகள் பாரதியும் சிசுவை தண்ணீரில் அழுத்தி கொலை செய்தனர். சொத்தின் மீது கொண்ட ஆசையால் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அரக்கோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
newstm.in

