Theme Check

41 வயது வீரர் வெண்கலம் வென்றார்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3ஆவது பதக்கம் !!

41 வயது வீரர் வெண்கலம் வென்றார்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3ஆவது பதக்கம் !!

41 வயது வீரர் வெண்கலம் வென்றார்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3ஆவது பதக்கம் !!
X

டோக்கியோ விறுவிறுப்பாக நடந்த ஒலிம்பிக் போட்டிகள் பெரும் உற்சாகத்துடன் முடிந்தது. இறுதி நாளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வீரர். அதே நகரில் தற்போது மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியாவில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் வட்டு எறிதல் விளையாட்டில் வெண்கலம் வென்றுள்ளார் 41 வயதான இந்திய வீரர் வினோத் குமார். F52 பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது பதக்கம் இது.

nisath kumarஉயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் பெற்ற நிஷித் குமார்

முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான வினோத் குமார் பணியின் போது பனிச்சரிவில் சிக்கி கால் முழுவதும் செயலிழந்துள்ளது. அதையடுத்து அவர் சொந்த ஊரில் பலசரக்கு கடை ஒன்றை வைத்து, நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தட்டு எறிதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் அதில் ஈடுபாட்டுடன் விளையாட ஆரம்பித்தார். இப்போது பதக்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

nisath kumar

பதக்கம் வென்ற வினோத் குமாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



newstm.in


Tags:
Next Story
Share it