இந்தியாவில் ஒரே நாளில் 4,100 பேர் பலி.. திடீர் உயர்வுக்கு இதுதான் காரணம்..!
இந்தியாவில் ஒரே நாளில் 4,100 பேர் பலி.. திடீர் உயர்வுக்கு இதுதான் காரணம்..!

இந்தியாவில் நேற்று முன்தினம் 1,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று இந்த எண்ணிக்கை 1,685 ஆக சரிவடைந்தது. இந்நிலையில், இன்று புதிதாக 1,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,18,032 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,100 பேர் (நேற்றைய பலி எண்ணிக்கை 83) உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,20,855 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 4,005 பேரும், கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 79 பேரும் இன்றைய கொரோனா உயிரிழப்பில் சேர்க்கப்பட்டதே இந்த உயர்வுக்கு காரணம்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,349 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,80,436 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு தற்போது 16,741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,82,87,68,476 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,07,479 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

