44 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி!!
44 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி!!

தமிழகத்தில் 44 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி ஓய்வு பெற்றதை அடுத்து, ஏடிஜிபி அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்ட்டுள்ளார். தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனர் பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூனியர் விகடன் குழுமம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டில் சிக்கிய ஐஜி கண்ணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் கண்ணனை ஆயுதப் படை பிரிவு ஐஜியாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வடக்கு மண்டல ஐஜி ஆக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மண்டல ஐஜியாக சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணனும், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை அண்ணாநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை சைபர் கிரைம் துணை ஆணையர் பதவியில் தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகரத்தின் தலைமை இடத்திற்கு புதிதாக துணை ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு சுரேஷ் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கு எஸ்பியாக சண்முகப்பிரியா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
newstm.in

