Theme Check

4 பெண்களிடம் இருந்து 446 மதுபாட்டில்கள் பறிமுதல் !!

4 பெண்களிடம் இருந்து 446 மதுபாட்டில்கள் பறிமுதல் !!

4 பெண்களிடம் இருந்து 446 மதுபாட்டில்கள் பறிமுதல் !!
X

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் கடத்த முயன்ற 4 பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண்களை பிடித்து விசாரித்தனர். இதில், 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்து இருந்த பைகளை சோதனையிட்டதில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

gfd

இதையடுத்து 4 பேரையும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த வள்ளி (40), விஜயா (50), செல்வி (50), கல்பனா (34) என்பதும், புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, கடத்திச் சென்று தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 446 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி, தமிழக எல்லையில் ஆண்களையே பெரும்பாலும் போலீசார் சோதனை செய்வர். இதனை அறிந்துகொண்டு அவர்களுக்கு டிமிக்கிகொடுக்கும் வகையில் பெண்களே மதுபாட்டில்களை கடத்த தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

Next Story
Share it