Theme Check

தமிழக அரசில் 4.5 லட்சம் காலி பணியிடங்கள்.. விரைவில் நிரப்ப அரசுக்கு கோரிக்கை..!

தமிழக அரசில் 4.5 லட்சம் காலி பணியிடங்கள்.. விரைவில் நிரப்ப அரசுக்கு கோரிக்கை..!

தமிழக அரசில் 4.5 லட்சம் காலி பணியிடங்கள்.. விரைவில் நிரப்ப அரசுக்கு கோரிக்கை..!
X

“தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி, வேலையின்மை பிரச்சனையை தீர்க்க வேண்டும்” என, அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் கூறியதாவது: “தமிழகத்தில், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 2019 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, அங்கு பதிவு செய்து காத்திருப்போரில் 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் 40 லட்சம் பேர்.

இந்தியாவில் அவ்வாறு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 15 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது, என ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் 20 கோடி பேர் உள்ளனர்.

தமிழக அரசின் துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைய தலைமுறைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் விதமாக, அந்த காலிப்பணியிடங்களை அரசு நிரப்பிட வேண்டும்.

அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட் குறைப்பினை கைவிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

Next Story
Share it