45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கடத்தல்? விழி பிதுங்கும் தமிழகம்
45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கடத்தல்? விழி பிதுங்கும் தமிழகம்

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில் குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் ஏற்றி வந்த லாரிக்கு பாஜகவினர் பூஜை, அலங்காரம் செய்து கால தாமதம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகளும் வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழக அரசுக்கு தெரியாமலேயே இந்த 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை எடுத்துச் சென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எங்களுக்கு தெரியாமல் மத்திய அரசு 45,000 கிலோ ஆக்சிஜனை, தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலத்திற்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மாநில அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான் தற்போது அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

