ஒரே வாகனம் மீது 46 வழக்கு.. உரிமையாளருக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்..!
ஒரே வாகனம் மீது 46 வழக்கு.. உரிமையாளருக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்..!

ஒரே இருசக்கர வாகனம் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த வாகன உரிமையாளரிடம் 24 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு காமாட்சி பாளையம் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவண்ணா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தார். அந்த வாகனம், பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அந்த வாகன உரிமையாளரிடமிருந்து அபராதமாக 24 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறக் கூடாது என அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
Next Story

