பள்ளிகளுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை.. மாணவர்கள் மகிழ்ச்சி..!
பள்ளிகளுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை.. மாணவர்கள் மகிழ்ச்சி..!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய - மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு பின்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, வரும் மே மாதம் 4-ம் தேதி முதல், ஜூன் மாதம் 20-ம் தேதி வரை கோடை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

