Theme Check

100 நாளில் அரசுக்கு ரூ.4,988 கோடி வருவாய்.. எந்த துறையில் தெரியுமா..?

100 நாளில் அரசுக்கு ரூ.4,988 கோடி வருவாய்.. எந்த துறையில் தெரியுமா..?

100 நாளில் அரசுக்கு ரூ.4,988 கோடி வருவாய்.. எந்த துறையில் தெரியுமா..?
X

தமிழக பதிவுத்துறையில், 100 நாளில் 4,988 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சராக உள்ள மூர்த்தி துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் காரணமாக, இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவு துறை அதிக வருவாய் ஈட்டி உள்ளது.

அந்த வகையில், பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரையிலான 100 நாட்களில் 4,988.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 2,577.43 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், தற்போது 2,410.75 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it