4ஆம் வகுப்பு மாணவன் மீது பாலியல் தொந்தரவு வழக்கு!!
4ஆம் வகுப்பு மாணவன் மீது பாலியல் தொந்தரவு வழக்கு!!

9 வயது சிறுவன் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையை அடுத்த தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் செல்போனுக்கு அடிமையாகி அதில் ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த எல் கே ஜி படிக்கும் 4 வயது சிறுமி அந்த சிறுவனின் வீட்டருகே வசித்து வந்தார். சில நாள் முன்பு அந்த நாலாம் வகுப்பு மாணவன் அந்த சிறுமியை விளையாட அழைத்து சென்று , சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி தனது அந்தரங்க உறுப்பில் வலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார் . அதை கேட்டு அதிர்ச்சியான அந்த பெற்றோர் அந்த சிறுமியிடம் விசாரித்த போது நடந்ததை கூறினார்.
பின்னர் அந்த சிறுவன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டதும் போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் சிறுவன் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
newstm.in

