Theme Check

கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானம் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!!

கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானம் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!!

கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானம் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!!
X

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருப்பாம்புரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Increase-in-internal-rates-for-temple-workers

அப்போது கோவில் திருவிழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் சாப்பிட்ட 5 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், பேதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள், உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

food

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் திருப்பாம்புரம் பகுதியில் முகாம் அமைத்து மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர்.

கோயில் அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து, குடவாசல் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it