தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் – 5 பேர் உயிரிழப்பு!!
தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் – 5 பேர் உயிரிழப்பு!!

ஒடிசாவில் இருந்து விஜயவாடாவிற்கு சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் உயிரிழந்தனா்.
ஒடிசா மாநிலத்தின் சின்னப்பள்ளியில் இருந்து இன்று அதிகாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 போ் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அல்லூர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. ஓட்டுநர் பேருந்தை தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in
Next Story

