Theme Check

சொத்துக்காக குடும்பத்தில் 5 பேர் கொலை: விசாரணையில் பகீர் தகவல் !

சொத்துக்காக குடும்பத்தில் 5 பேர் கொலை: விசாரணையில் பகீர் தகவல் !

சொத்துக்காக குடும்பத்தில் 5 பேர் கொலை: விசாரணையில் பகீர் தகவல் !
X

சொத்துக்காக குடும்பத்தையே விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியில் பிரிஜேஷ் தியாகி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவரது மகன் ரேஷு அண்மையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது போலீசாருக்கு கிடைத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதாவது ரூ. 5 கோடி மதிப்பிலான பூர்விக சொத்துக்காக பிரஜேஷ் தியாகியின் சகோதரர் லீலு என்பவர் 20 ஆண்டுகளில், ஐந்து குடும்ப உறுப்பினர்களை கொலை செய்தது அம்பலமானது.

murder

பின்னர் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 2001ஆம் ஆண்டு தனது இரண்டாவது சகோதரர் சுதிர் தியாகியை லீலு விஷம் வைத்து கொலை செய்துள்ளார். பிறகு சில மாதங்கள் கழித்து அவரது இளைய மகள் பாயலையும் விஷம் கொடுத்துக் கொன்றுள்ளார்.

இந்த கொலைகள் குறித்து யாருக்கும் சந்தேகம் வராததுபோல் குடும்ப உறுப்பினர்களையும் ஏமாற்றிவந்துள்ளார். இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சுதிரின் மூத்த மகள் பாரூல், பின்னர் பிரிஜேஷ் தியாகியின் மகன் நிஷு, தற்போது இவரது இளைய மகன் ரேஷு கொலை செய்துள்ளார். இந்த கொலையில்தான் லீலு போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

murder

மேலும் கொலை செய்த அனைவரது சடலங்களையும் இரவு நேரங்களில் அருகில் உள்ள ஆறு, ஏரிகளில் வீசியுள்ளார். இதனால் லீலு மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது.
தற்போது லீலுவும் கொலைகளுக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் ராகுல், சுரேந்திரா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பூர்வீக சொத்துக்காக குடும்பத்தையே கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it