Theme Check

இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் !

இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் !

இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் !
X

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. தற்போது, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் நாட்டு மக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில், தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பல மாநிலங்கள் தெரிவித்து உள்ளன. இதனையடுத்து, தடுப்பு மருந்து உற்பத்தியை விரைவுபடுத்தும்படி மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் வி, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவன தடுப்பூசி, நோவோவேக்ஸ், ஸைடஸ் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக எடுத்துக் கொள்ளும் தடுப்பூசி ஆகியவை அக்டோபருக்குள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

இதில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இன்னும் 10 நாட்களில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it