ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தோல்வி.. இதை நம்பியதுதான் காரணம்..!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தோல்வி.. இதை நம்பியதுதான் காரணம்..!

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சித் தேர்தலில், மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக, திமுக, பாஜக, பாமக உட்பட 145 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், சுயேச்சையாக மட்டும் 72 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
கோட்டக்குப்பம் முன்னாள் தலைவர் அப்துல் அமீதுவுக்கு அதிமுகவில் சீட் கொடுத்தது. ஆனால் அவர், ‘சுயேச்சையாக போட்டியிட்டால் தனது சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் ஓட்டுக்களை பெற்று விடலாம்’ என்ற கணக்கில், தனது குடும்ப உறுப்பினர்களுடன் 5 வார்டுகளில் சுயேச்சையாக களம் இறங்கினார்.
இதையடுத்து, அப்துல் அமீது 15-வது வார்டிலும், அவரது மகள் ராபியத்துல் பசிரியா 20-வது வார்டிலும், மருமகன் முபாரக் (எ) முகமது பாரூக் 22-வது வார்டிலும், மகன் முகமது பாரூக் 25-வது வார்டிலும், மருமகள் ஹத்திஜா பீவி 27-வது வார்டிலும் போட்டியிட்டனர். இதில், அப்துல் அமீது உட்பட 5 பேரும் தோல்வியடைந்தனர்.

