Theme Check

வகுப்பறையில் மது அருந்திய 5 மாணவிகள் சஸ்பெண்ட்!!

வகுப்பறையில் மது அருந்திய 5 மாணவிகள் சஸ்பெண்ட்!!

வகுப்பறையில் மது அருந்திய 5 மாணவிகள் சஸ்பெண்ட்!!
X

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் தனியார் கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் சிலர் மது குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவிகள் வகுப்பறை மேஜையில் அமர்ந்து மதுவை குளிர்பானத்துடன் கலந்து குடிக்கும் வீடியோ கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வைரலாகி வந்தது.

விசாரணையில் அந்த மாணவிகள் காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் செயல்படும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருபவர்கள் என தெரியவந்தது.

student-drinks

இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் விசாரணை நடத்தியதில் மாணவிகளின் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் அவர்களுக்கு வெளிமாநில மதுபானத்தை வாங்கி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்களது பெற்றொரை அழைத்து எச்சரித்த கல்லூரி முதல்வர், சம்மந்தப்பட்ட மாணவர் மற்றும் வகுப்பறையில் அமர்ந்து மது குடித்த மாணவிகள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

newstm.in

Next Story
Share it