Theme Check

தவறான சிகிச்சையால் உயிரிழந்த 5 வயது சிறுமி.. தலைமறைவான மருத்துவர்..!!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த 5 வயது சிறுமி.. தலைமறைவான மருத்துவர்..!!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த 5 வயது சிறுமி.. தலைமறைவான மருத்துவர்..!!
X

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு 5 வயதில் லட்சிதா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி லட்சிதாவுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டிற்கு அருகில் உள்ள மருந்தகத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்கு இருந்த மருத்துவர் சத்தியசீலன் லட்சிதாவுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்துள்ளார். அதன் பின் ஊசி போட்ட சில மணி நேரத்தில் லட்சிதாவின் உடல்நிலை மோசமான நிலையில், அவர் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி லட்சிதா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சத்தியசீலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சத்தியசீலனை தேடி வருகின்றனர்.

Next Story
Share it