தந்தை தாக்கியதில் 5 வயது மகனை உயிரிழப்பு.. தாய் அளித்த வாக்குமூலம் !
தந்தை தாக்கியதில் 5 வயது மகனை உயிரிழப்பு.. தாய் அளித்த வாக்குமூலம் !

பாடம் படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிய 5 வயது மகனை அவரது தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் நீப் சராய் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (27). இவருக்கு உத்கர்ஷ் என்ற 5 வயது மகன் உள்ளார். தற்போது டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
பால் வியாபாரியான ஆதித்யா, நேற்று மாலை 6 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மகன் உத்கர்ஷ் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஆதித்யா தனது மகனிடம் செல்போனில் கேம் விளையாடுவதை நிறுத்தி விட்டு பாடம் படிக்கும்படி கூறியுள்ளார். ஆனால், தந்தையை பேச்சை கேட்காமல், சிறுவன் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த ஆதித்யா அருகில் இருந்த கட்டையால் தனது மகனை தாக்கியுள்ளார். மேலும், அவரின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், உத்கர்ஷ் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த சிறுவனின் தாய் அதிர்ச்சி அடைந்து, மகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று அனுமதித்துள்ளார். அங்கு உத்கர்ஷினை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சிறுவனின் கழுத்து, மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்கள் இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார் உத்கரிஷின் தாயிடம் விசாரணை நடத்தினர். ஆதித்யாவிடம் தொடர்ந்து நடத்தி விசாரணையில் தனது மகனை கடுமையாக தாக்கியதையும், அவர் மயங்கி விழுந்ததையும் உறுதி செய்தார். இந்த வாக்குமூலத்தையடுத்து ஆதித்யாவை போலீசார் கைது செய்தனர்.
newstm.in

