Theme Check

5 வருடம் சிறை, 50 லட்சம் அபராதம்! சிவப்பழகு க்ரீம்களுக்கு மோடி அரசின் அதிர்ச்சி வைத்தியம்!

5 வருடம் சிறை, 50 லட்சம் அபராதம்! சிவப்பழகு க்ரீம்களுக்கு மோடி அரசின் அதிர்ச்சி வைத்தியம்!

5 வருடம் சிறை, 50 லட்சம் அபராதம்! சிவப்பழகு க்ரீம்களுக்கு மோடி அரசின் அதிர்ச்சி வைத்தியம்!
X

நான்கே நாட்களில் சிவப்பழகு பெறலாம் என்று இனி உங்கள் வீட்டின் வரவேற்பறையில் உள்ள தொலைக்காட்சிகளில் ஃபேர்னெஸ் க்ரீம் நிறுவனங்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக கொட்டி உங்கள் வாழ்க்கையோடு விளையாட முடியாது.
5 வருடம் சிறை, 50 லட்சம் அபராதம்! சிவப்பழகு க்ரீம்களுக்கு மோடி அரசின் அதிர்ச்சி வைத்தியம்!

இப்படி போலியாய் வாக்குறுதி தரும் விளம்பரங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இருக்கிறது மோடி அரசு. இப்படி நான்கே நாட்களில் சிவப்பழகைப் பெறலாம் என்றோ, மூன்றே நாட்களில் மூணு இன்ச் உயரமாகலாம் என்றோ, ஐந்தே நாட்களில் அரை அங்குலம் தொப்பையைக் குறைக்கலாம் என்றோ வாக்குறுதிகளை அள்ளி வீச முடியாது. அப்படி பொய்யான வாக்குறுதிகளைத் தந்து விளம்பரம் செய்தால், 5 வருட சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் வரையில் அபராதமும் விதிக்க புதிய சட்டம் ஒன்றை தயாரித்து முன்மொழிய தயாராகி வருகிறது மத்திய அரசு. இந்த போலி வாக்குறுதி விளம்பர கட்டுப்பாடுகள் முடி உதிர்தல், சிவப்பழகு, எடை குறைதல், உயரமாகுதல், காது கேட்கும் கருவிகள் போன்றவைகளுக்கும் பொருந்தும்.

5 வருடம் சிறை, 50 லட்சம் அபராதம்! சிவப்பழகு க்ரீம்களுக்கு மோடி அரசின் அதிர்ச்சி வைத்தியம்!

இனி நீங்கள் மேஜிக் செய்யும் என்று நம்பிக் கொண்டிருக்கும் நிறுவன க்ரீம்கள் எல்லாம் தங்களது விளம்பர யுக்தியை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. கூடிய விரைவில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

newstm.in

Tags:
Next Story
Share it