Theme Check

விவசாயிகளுக்கு 50% நிதியுதவி.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

விவசாயிகளுக்கு 50% நிதியுதவி.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

விவசாயிகளுக்கு 50% நிதியுதவி.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
X

விளை பொருட்களை முதல் முறையாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “முதன்முறையாக ஏற்றுமதி செய்பவர்களுக்கு அதிகபட்ச உச்சவரம்பின் (எம்ஆர்எல்) சோதனைச் செலவில், சோதனை கட்டணத்தில் 50% நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், முதல் முறையாக வெளிநாடுகளுக்கு தங்கள் விளை பொருட்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு சோதனை கட்டணத்தில் 50% நிதியுதவியை தமிழக அரசு வழங்கும். இத்திட்டம் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தால் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் https://agrimark.tn.gov.in/MRS/exporter என்ற இணையதளத்திற்கு சென்று, வருகிற 15-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it