Theme Check

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 50 வயது காம கொடூரன்..!!

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 50 வயது காம கொடூரன்..!!

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 50 வயது காம கொடூரன்..!!
X

சமீப காலமாக பெண்களுக்கு பாலியல் வன்முறை நடைபெறுவது அதிகமாகியுள்ளது. அதுவும் சிறு குழந்தைகள் இதில் அதிகம் பாதிக்கப்படுவது தான் வருத்தத்திற்குரிய விஷயம்... இங்கும் ஒரு 9 ஆம் வகுப்பு மாணவியை 50 வயது மதிக்கத்தக்க மின்வாரிய ஊழியர் கர்ப்பமாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது.இதனால் அவரது தாய் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பார்த்து பார்த்து வளர்த்த செல்ல பிள்ளைக்கு இப்படி ஒரு நிலை வந்துள்ளது அறிந்து கதறி கதறி அழுதனர்.

1

உடனடியாக அந்த சிறுமியின் பெற்றோர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது மின்சார வாரியத்தில் உதவி தணிக்கை அலுவலராக பணியாற்றி வரும் ராஜசேகரன் (வயது 48) என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜசேகரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story
Share it