60 நாட்களில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!
60 நாட்களில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

தமிழகத்தில், மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 60 நாட்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், மின் புதைவட கம்பிகள் பதிக்கும் பணி இரண்டு மண்டலங்களில் முடிவுற்றுள்ளது. வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாவது அலகு 800 மெகாவாட் திட்டம் டிசம்பர் மாதத்தில் முடிவடையும்.
மேலும், எண்ணூரில் இரண்டு மற்றும் மூன்றாவது அலகு 1,320 மெகாவாட் திட்டமானது 2024-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உப்பூர் மற்றும் உடன்குடி மின் திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

