கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.50,000 பரிசு!!

கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.50,000 பரிசு!!

கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.50,000 பரிசு!!
X

காணாமல் போன கிளியை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என பெண் ஒருவர் நூதன விளம்பரம் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் ஜெய் நகர் பகுதியில் வசித்து வரும் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் விலங்கு மற்றும் பறவை இனங்களை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

இவர் ருஸ்துமா என்ற பெயரிடப்பட்ட இரண்டு ஆப்பிரிக்க சாம்பல் நிற அரிய வகை கிளிகளைச் செல்லமாக வளர்த்து வந்தார். அந்த கிளிகளும் இவர்கள் குடும்பத்துடன் மிகுந்த பாசத்துடன் வளர்ந்து வந்தது.

இந்நிலையில் ஜூலை 16ஆம் தேதி முதல் இரண்டு கிளிகளில் ஒன்று காணாமல் போய்விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களிலும் அந்த கிளியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அந்த கிளி கிடைக்கவில்லை.

parrot1

இதையடுத்து காணாமல் போன கிளையைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு தருவதாக பேனர் வைத்துள்ளனர். கிளியால் வெகுதூரம் செல்ல முடியாது, எங்களால் வலியைத் தாங்க முடியவில்லை. கிளியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ. 50 ஆயிரம் பணம் வழங்கப்படும் என சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

ஆண்டுதோறும் இந்த இரண்டு கிளிகளின் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில் ஒரு கிளி காணாமல் போனதிலிருந்து அவரும் அவரது குடும்பத்தாரும் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். குடும்பமே காணாமல் போன கிளியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it