Theme Check

ஐஐடியில் 55 பேருக்கு தொற்று உறுதி.. கூடுதல் கவனம் செலுத்த உத்தரவு..!

ஐஐடியில் 55 பேருக்கு தொற்று உறுதி.. கூடுதல் கவனம் செலுத்த உத்தரவு..!

ஐஐடியில் 55 பேருக்கு தொற்று உறுதி.. கூடுதல் கவனம் செலுத்த உத்தரவு..!
X

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் ஐஐடி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா கண்டறியப்பட்ட அனைவருக்கும் குறைவான அளவு பாதிப்புதான் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் 3 அலைகளின் போது இருந்த பதற்றம் இப்போது தேவையில்லை. ஏனெனில், புதிய வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனாலும், முதல் 3 அலைகளில் ஏற்பட்ட தாக்கங்களை மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை ‘எக்ஸ் இ’ வகை கொரோனா கண்டறியப்படவில்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it