Theme Check

3 ஆண்டுகளில் 5,569 கைதிகள் உயிரிழப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல் !!

3 ஆண்டுகளில் 5,569 கைதிகள் உயிரிழப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல் !!

3 ஆண்டுகளில் 5,569 கைதிகள் உயிரிழப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல் !!
X

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், போலீஸ் காவலில் இருக்கும் போது பலியான கைதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்துள்ளார்.

police

மத்திய அமைச்சர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, கடந்த 2018 முதல் 2021ல் தற்போது வரை காவலில் இருந்த 5,569 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். அதில், நீதிமன்றக் காவலில் 5,221 பேரும், போலீஸ் காவலில் 348 பேரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2018 - 19 வரை 1,933 கைதிகளும், 2019 - 20 வரை 1,696 கைதிகளும் 2020 முதல் தற்போது வரை 1,940 கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.

police

இந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,318 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதில், போலீஸ் காவலில் 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 232 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். அதில், போலீஸ் காவலில் 25 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it