திமுகவில் இருந்து 56 சுயேச்சை வேட்பாளர்கள் சஸ்பெண்ட்..!!
திமுகவில் இருந்து 56 சுயேச்சை வேட்பாளர்கள் சஸ்பெண்ட்..!!

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், தருமபுரி, தஞ்சை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் 56 பேரை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி, சுயேச்சையாக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும், இதேபோல் செயல்பட்ட மேலும் பல வேட்பாளர்களை இடைநீக்கம் செய்வதற்கு கட்சி தலைமை ஆயுத்தமாகி வருகிறது.
நகராட்சி, மாநகராட்சி அளவில் வார்டுகளில் போட்டியிட சில திமுக நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு சென்றுவிட்டது இதனால் வாய்ப்பு கிடைக்காத திமுக நிர்வாகிகள் சுயேட்சைகளாக சில இடங்களில் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர்களையும், அதன் கூட்டணி வேட்பாளர்களையும் எதிர்த்து திமுக நிர்வாகிகள் சிலர் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே இப்படி நிர்வாகிகள் யாரும் சுயேட்சையாக போட்டியிட கூடாது என்று திமுக தலைமை எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இதை மீறி திமுக நிர்வாகிகள் 56 பேர் வெவ்வேறு மாவட்டங்களில் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
இந்த நிலையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 56 பேர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திமுக நிர்வாகிகள் இடையே இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

