இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி 56 வயது பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞர் வெறிச்செயல்
இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி 56 வயது பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞர் வெறிச்செயல்

மனநலம் பாதித்த 56 வயது பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கி இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜாஞ்ச்கிர்- சம்பா மாவட்டத்தில் சாலையோரத்தில் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். முதலில் சாலை விபத்தில் அப்பெண்ணின் மரணம் நிகழ்ந்திருக்கும் என போலீசார் கருதினார்.
ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் போலீசார் அதிர்ச்சி அடையும் வகையில் உண்மைகள் தெரியவந்தன. இறந்த பெண்ணுக்கு 56 வயதுக்குள் இருக்கலாம் என்றும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு, அவரது தலையில் பாறாங்கல் கொண்டு நசுக்கி கொல்லப்பட்டுள்ளார் என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் கண்காணித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவர் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்ததால், உள்ளூர்வாசிகள் எதைக் கொடுத்தாலும் அதை வாங்கி சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்ததாகவும் தெரியவந்தது.
இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் 31 வயதான கிஷன் யாதவ் என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்த பெண் சண்டையிட்டு கிஷன் யாதவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிஷன் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியதோடு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் சரமாரியாக குத்தி, இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். பின் அவரது தலையை பாறாங்கல் கொண்டு நசுக்கி கொன்றுள்ளார். அந்த பெண்ணை தலைமுடியை பிடித்து கிஷன் இழுத்துசெல்லும் சிசிடிவி காட்சிகளும் காவல்துறைக்கு முக்கிய ஆதாரமாக கிடைத்தது. இதனைவைத்து குற்றவாளியை உறுதி செய்த போலீசார் கிஷன் யாதவை கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்தனர்.
newstm.in

