Theme Check

5ஆவது டெஸ்ட்: கோலி - பேர்ஸ்டோ கடும் வாக்குவாதம்.. வீடியோ !!

5ஆவது டெஸ்ட்: கோலி - பேர்ஸ்டோ கடும் வாக்குவாதம்.. வீடியோ !!

5ஆவது டெஸ்ட்: கோலி - பேர்ஸ்டோ கடும் வாக்குவாதம்.. வீடியோ !!
X

இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 84 ரன்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. முதல் இரண்டு நாட்களிலும் மழை பெய்ததால் ஆட்டம் பல முறை இடையிடையே நிறுத்தப்பட்டது. 2ஆவது நாளில், கோஹ்லியும் பேர்ஸ்டோவும் மழை இடைவேளையின் போது ஒன்றாக நடந்து செல்வதைக் காண முடிந்தது.

இருப்பினும், 3 ஆம் நாள் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியது. துவங்கிய சில நிமிடங்களில் விராட் கோலி மற்றும் ஜானி பேர்ஸ்டோ இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. முதலில் கோஹ்லி தனது கிரீஸில் நிற்கும்படி சைகை காட்டி பேர்ஸ்டோவிடம் நடந்து செல்வது வீடியோவில் பதிவானது. பின்னர் அமைதியாக இருக்கும்படி பேர்ஸ்டோவை சைகை செய்வதைக் காண முடிந்தது.

virat kholi

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோலியுடன் பேசிய பிறகு, கோலி புன்னகையுடன் பேர்ஸ்டோவை அணுகி, அவரது கையில் செல்லமாக தட்டி விட்டு சென்றார். அதேபோல பேர்ஸ்டோவும் விராட் கோலியை தோளில் தட்டிக்கொடுத்தார். இந்த சம்பவம் நடக்கும்போது 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து கொண்டிருந்தது. இதற்குபின் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ இருவரும் அதிரடிக்கு திரும்ப இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. பேர்ஸ்டோ சதம் விளாசினார்.

இதனிடையே, ஜானி பேர்ஸ்டோ - விராட் கோலி இடையேயான வார்த்தை மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



newstm.in


Tags:
Next Story
Share it