Theme Check

5 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்.. தலைமை ஆசிரியருக்கு தூக்குத் தண்டனை !!!

5 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்.. தலைமை ஆசிரியருக்கு தூக்குத் தண்டனை !!!

5 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்.. தலைமை ஆசிரியருக்கு தூக்குத் தண்டனை !!!
X

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் புல்வாரி ஷரீப் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 5 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யபட்டார்.

மாணவியை மிரட்டி பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஆசிரியர் ஒருவரும் இணைந்து இக்கொடூரமான செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். பள்ளி வளாகத்திலேயே சிறுமிக்கு இந்த துயரம் நடந்துள்ளது. அச்சம் காரணமாக சிறுமியும் அதனை வெளியே கூறவில்லை.

இந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக மானவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து, சிறுமியிடம் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளி தலைமையாசிரியரும், ஆசிரியரும் பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பாட்னா சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி அவதேஷ் குமார் தீர்ப்பு வழங்கினார். அதில் பிறப்பித்த உத்தரவில், மாணவி பலாத்கார வழக்கில் முக்கியக் குற்றவாளியான பள்ளி தலைமையாசிரியராக இருந்த அரவிந்த் குமாருக்கு தூக்கு தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மற்றொரு குற்றவாளியான, ஆசிரியர் அபிஷேக் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it