Theme Check

போதை மாத்திரை விற்பனை.. இளம்பெண் உட்பட 6 பேர் கைது..!

போதை மாத்திரை விற்பனை.. இளம்பெண் உட்பட 6 பேர் கைது..!

போதை மாத்திரை விற்பனை.. இளம்பெண் உட்பட 6 பேர் கைது..!
X

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார், வீராசாமி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அசோக் நகர் புதூரை சேர்ந்த கிஷோர் (23), கே.கே நகர் ராணி அண்ணா நகர் குடியிருப்பைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் மடக்கிய போலீசார் அவர்களது பையை சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின்படி, கொத்தவால் சாவடியைச் சேர்ந்த பூங்குன்றன் (26), கோகுல் (24), பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜலட்சுமி (22), ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள், 2 லேப்டாப், ஒரு ஐபேடு, 8 செல்போன்கள், 4 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story
Share it