Theme Check

பிரபல நடிகையின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கம்!!

பிரபல நடிகையின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கம்!!

பிரபல நடிகையின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கம்!!
X

மூலதன ஆதாய வரி செலுத்தாதது தொடர்பாக பிரபல நடிகை கவுதமியின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

நடிகை கவுதமி சென்னை உயர் நீதிமன்ற தாக்கல் செய்த மனுவில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கடந்த 2016ஆம் ஆண்டு 4.10 கோடிக்கு விற்றதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம், விவசாய நிலத்தின் வருவாய் 11.17 கோடி என மதிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த உத்தரவைத் தொடர்ந்து தனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், இதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுபட்டதால் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

gautami

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கவுதமியின் ஆறு வங்கிக் கணக்குகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நான்கு வாரங்களுக்குள் மீதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நிறுத்திவைத்த நீதிபதி, விசாரணையை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

newstm.in

Next Story
Share it